Skip to content

Tan Sri K.R.Soma Foundations

டான் ஸ்ரீ கே.ஆர்.சோமா அறக்கட்டளை

Menu
  • Home
  • Gallery
  • Forms & Brochures
  • Contact US

International Rules & Regulations

International Book Award- Rules & Regulations

7 வது டான் ஸ்ரீ கே.ஆர்.சோமா அனைத்துலகப் புத்தகப்பரிசுப் போட்டி

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான் ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அனைத்துலகப் புத்தகப் பரிசுப் போட்டியினை நடத்தி வருகிறது. 2024 ஆம் ஆண்டு, 7வது முறையாக நடைபெறும் போட்டிக்கு, 2022 – 2023 ஆம் ஆண்டுகளில் பிரசுரிக்கப்பட்ட மலேசிய நாட்டு படைப்பாளர்களின் நூல்களும், அனைத்துலக ரீதியிலான படைப்பாளர்களின் நூல்களும் வரவேற்கப்படுகின்றன.

விதிமுறைகள்

1. போட்டியின் பெயர் – டான் ஸ்ரீ கே.ஆர். சோமா அனைத்துலகப் புத்தகப்பரிசு.

2. நோக்கம்

அ. அனைத்துலக மற்றும் மலேசிய நிலையில் தரமான தமிழ்ப் புத்தகங்கள் வெளிவர ஊக்குவித்தல்

ஆ. படைக்கப்படும் நூல்கள் தமிழ்மொழிக்கும் பண்பாட்டுக்கும் பயன் விளைவிக்கும் சிறந்த நூல்களாக அமைதல் வேண்டும்

3. பரிசுத்தொகைகள்

அ. பரிசுத்தொகை – அனைத்துலக நிலையில் – us$ 10,000 (அமெரிக்க டாலர்)

ஆ. பரிசுத்தொகை – மலேசியப் பிரிவில் – RM 10,000 (மலேசிய ரிங்கிட்)

4. படைப்பு

அ. துறை – நாவல், வரலாறு, ஆய்வு, தனி ஒருவரின் சிறுகதைத் தொகுப்பு, தனி ஒருவரின் கவிதைத் தொகுப்பு

ஆ. மொழி – தமிழ்

இ. மொழித்தரம் – தமிழ்மொழியின் இலக்கணம், உரைநடை, சொல்லாட்சி, மரபு ஆகிய கூறுகளில் தரமுடையதாக இருத்தல் அவசியம்.

ஈ. படைப்புத்திறன் – அந்தந்த துறைகளுக்குறிய கலைக்கூறுகள், உத்திகள், ஆகியவற்றுடன் பண்பாட்டுக் கூறுகளுக்கும் உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.

உ. விளைபயன் – தமிழ்மொழிக்கும் இனத்திற்கும் பண்பாட்டிற்கும் கீழ்க்காணும் துறைகள் சார்ந்து பயன் விளைவித்தல்.

(i) மொழி இலக்கியம் கலை, பண்பாடு போன்றவை

(ii) கல்வி, அறிவியல், சமூகவியல்

(iii) மனித அக மேம்பாடு , வாழ்வியல் நெறி போன்றவை

(iv) இதர மேம்பாட்டுக்கூறுகள்

5. நூலின் பங்கேற்புத் தகுதி

(i) சொந்தப்படைப்பாக இருத்தல் வேண்டும்.

(ii) கல்வித்தகுதி கருதி உருவாக்கப்படும் ஆய்வேடு ஏற்றுக்கொள்ளப்படாது.

(iii) வாழ்க்கை வரலாற்று நூல்களில், படைப்பாளரின் சொந்த வரலாற்று நூல்  ஏற்றுக்கொள்ளப்படாது.

(iv) குறிப்பிட்ட நோக்கத்திற்காக இடுபணியாகச் செய்யப்படும் ஆய்வுச்சார்ந்த நூல்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

(v) பொது நல நோக்கங்களுக்கு அப்பாற்பட்டவையாக எழுதப்படும் நூல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

(vi) அனைத்து நூல்களும் ISBN பதிவு பெற்றிருக்க வேண்டும்.

(vii) ஏற்கனவே வெளிவந்து இந்தப் போட்டிக்காக திருத்தி, மறு பதிப்பு செய்து அனுப்பி வைக்கப்படும் நூல்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

6. நூலின்அமைப்பு

(i) அளவு – 14 செ.மீ 21 செ.மீஅளவுக்கு குறையாதது

(ii) பக்கங்கள் – 200 பக்கங்களுக்கு குறையாதது

(iii) எழுத்துரு – 12 புள்ளிக்கும் மிகாதது (வாசிப்புத்தகுதி)

(iv) பதிப்புத்தரம் – ஏற்புடையதாக இருத்தல் வேண்டும்.

7. படைப்பாளர்

(i) அறவாரியப் பொறுப்பாளர்களும் பணியாளர்களும் அவர்தம் குடும்பத்தின் நேரடி உறுப்பினர்களும் பங்கேற்புக்குத் தகுதி பெற மாட்டார்கள்.

(ii) குறிப்பிட்ட ஆய்வாண்டிற்குரிய நடுவர்களது குடும்பங்களின் நேரடி உறுப்பினர்கள் பங்கேற்புக்குத் தகுதி பெற மாட்டார்கள்.

8. பங்கேற்பு

(i) படைப்பாளரோ அல்லது நூலைப் பதிப்பிக்கும் பதிப்பகத்தாரோ, எழுத்தாளர்களின் அனுமதியோடு நூல்களைப் போட்டிக்கு அனுப்பி வைக்கலாம்.

(ii) பரிசு பெறும் நூலை அனுப்பி வைக்கும் பதிப்பகத்தாருக்கும் கீழ்க்காணும் வகையில் சன்மானம் வழங்கப்படும்.

*அனைத்துலக நூல் – 1000 அமெரிக்க டாலர் 

*மலேசிய நிலை – 1000 ரிங்கிட்

(ii) ஒருவர் ஒரு படைப்பை மட்டுமே அனுப்ப வேண்டும்.

(iii) பங்கேற்கும் நூலாசிரியர் / பதிப்பகத்தார் போட்டிக்கு 5 பிரதிகளை அனுப்பி வைக்க வேண்டும்.

(iv) நூல்கள் 2022 – 2023 ம் ஆண்டுகளில் எழுதப்பட்ட முதற் பதிப்பாக இருத்தல் வேண்டும்.

(v) பங்கேற்புக்கு, முறையாக நிறைவு செய்யப்பட்ட நுழைவுப்படிவம் அவசியம் இணைக்கப்பட வேண்டும்.

(vi) பங்கேற்புக்குரிய நுழைவுப் படிவத்தை http://tansrikrsomafoundations.nlfcs.com.my என்ற அறவாரிய அகப்பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

(vii) நூல்கள் அனுப்பப்பட்டதற்கான சான்று, அவை வந்து சேர்ந்ததற்கான சான்றாகாது. முடிவு நாளுக்குள் வந்தடைந்த நூல்கள் மட்டுமே பங்கேற்புக்குத் தகுதி பெறும்.

(viii) பங்கேற்புக்கான நுழைவுப் படிவமும் நூல்களும் வந்தடைந்ததற்கான சான்று கடிதம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ பங்கேற்பாளருக்கு தெரிவிக்கப்படும்.

(ix) தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே போட்டி முடிவு குறித்து அறிவிக்கப்படும்.

(x) பரிசளிப்புக்குப் பிறகு போட்டி குறித்த முடிவுகள் அறவாரியத்தின் அகப்பக்கத்திலும் ஊடகங்களின் வழியும் அறிவிக்கப்படும்.

9. பங்கு பெறும் நூல்களின் மதிப்பீடு

(i) போட்டிக்குத் தகுதி பெறும் ஒவ்வொரு நூலும் வெவ்வேறு நாடுகளைச் சார்ந்த 3 நடுவர்களால் ஆய்வு செய்யப்படும்.

(ii) நடுவர்களின் தனிப்பட்ட முடிவுகள், அறவாரிய உறுப்பினர்கள் அடங்கிய குழுவால் ஒருங்கிணைக்கப்பட்டு, பரிசுக்குரிய நூல் தேர்வு செய்யப்படும்.

(iii) பங்கு பெறும் ஒவ்வொரு நூலுக்கும் கீழ்க்காணும் மூன்று கோணங்களில், மேற்கூறப்பட்ட 4 ஆம் விதிமுறை சார்ந்து மதிப்பெண்கள் வழங்கப்படும்.

அ. மொழித்தரம் – 4 ஆ & இ தரும் விளக்கத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படும்

ஆ. படைப்புத்திறன் – 4 ஈ தரும் விளக்கத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படும்.

இ. விளைப்பயன் – 4 உ தரும் விளக்கத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படும்.

(iv) மதிப்பெண்கள்

அ. படைப்புத்திறன் – 40 %

ஆ. மொழித்தரம் – 30 %

இ. விளைப்பயன் – 30 %

10. பங்கேற்கும் நூல்களின் பதிப்புக்காலம்

(i) பரிசுக்கான ஆய்வும் தெரிவும் ஈராண்டுகளுக்கு (2022 – 2023) உரியது.

(ii) இந்தப் போட்டிக்கு 1.1.2024 முதல் 31.3.2024 வரையிலான காலக்கட்டத்திற்குள் வந்து கிடைக்கும் நூல்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

 (iii) 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பரிசு முடிவு, பரிசளிப்பு நாள், இடம் போன்ற தகவல்கள் அறிவிக்கப்படும்.

11. நடுவர்கள்

(i) பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள், அறவாரியத்தால் தெரிவு செய்யப்பட்டு நடுவர்களாக நியமிக்கப்படுவர்.

(ii) நடுவர்களின் முடிவே இறுதியானது.

12. பரிசளிப்பு

(i) பரிசு பெற்றவர்களுக்கு தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தலைவர் அல்லது டான் ஸ்ரீ கே.ஆர்.சோமா அறவாரியத்தலைவர், இருவரில் ஒருவர் பரிசுகளை வழங்குவார்.

(ii) அனைத்துலகப் பரிசு பெறுபவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர் அல்லது முறையான உதவியாளர் ஒருவருக்கும், இரு வழி வானூர்திப் போக்குவரத்தும் தங்குமிட வசதியும் வழங்கப்படும்.

(iii) மலேசிய நிலையில் வெற்றி பெறுபவருக்குப் போக்குவரத்து மற்றும் தங்கும் இடம் போன்ற செலவுகளுக்காக 500  மலேசிய ரிங்கிட் வழங்கப்படும்.

(iv) பரிசு பெறுபவர் பரிசளிப்பு நிகழ்ச்சியில் தமது படைப்பைப் பற்றி 10 நிமிடங்கள் உரை நிகழ்த்த வாய்ப்பு வழங்கப்படும்.

(v) பரிசு முடிவு செய்யப்பட்ட பின் நூலுக்குரியவரோ அவரைப் பிரதிநிதிக்கும் சட்ட ரீதியான வாரிசோ, அப்பரிசினைப்பெறத் தகுதியுடையவராவார்.

(vi) வெற்றி பெறும் படைப்பாளர்கள் பரிசு பெறுமுன், தங்களின் வெற்றி பெற்ற நூலின் 30 பிரதிகளை அறவாரியத்திற்கு வழங்க வேண்டும்.

13 விதிகளுக்கு விளக்கமும் மாற்றமும்

(i) விளக்கம்

அ. இந்த நிலை விதிகளில் நேரடியாகக் குறிப்பிடப்படாத அல்லது போதிய விளக்கமளிக்கப்படாத சூழல் அல்லது சிக்கல் தோன்றும் நிலையில் அதுகுறித்து அறவாரியம் எடுக்கும் நிலைப்பாடே இறுதியானது.

(ii) மாற்றம்

அ. தேவையென்று கருதப்படும்போது, இந்த விதிகளில் புதியவற்றைச் சேர்க்கவோ இருக்கும் ஒன்றைத் திருத்தவோ, நீக்கவோ அறவாரியத்துக்கு உரிமையுண்டு.

ஆ. எனினும் அறவாரியத்தால் குறைந்தபட்சம் மூவரைக் கொண்டு அமைக்கப்படும் பணிக் குழுவின் ஆய்வுக்கும், பரிந்துரைக்கும் ஏற்பவே மாற்றங்கள் செய்யப்படும்.

14.எல்லா படைப்புகளும்

31.3.2024 ம் தேதிக்குள் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படவேண்டும்.டத்தோ பா. சகாதேவன் PJN, SSA, PPT, ANS

நிர்வாக இயக்குனர்

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம்

டான் ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம்

10 வது மாடி, விஸ்மா துன் சம்பந்தன், த.பெ.எண் 12133

50768 கோலாலம்பூர்

DATUK B.SAHADEVAN PJN, SSA, PPT, ANS

Managing Director

NATIONAL LAND FINANCE COOPERATIVE SOPCIETY

Tan Sri K.R.Soma Language & Literary Foundation

10th Floor, Wisma Tun Sambanthan, P.O.Box 12133

50768 Kuala Lumpur.

மேல் விவரங்களுக்கு :

கரு பன்னீர்செல்வம்

(012 305 6799)

தொலைபேசி ; 603 2273 1250

தொலைநகல் ; 603 2273 0826

மின்னஞ்சல் முகவரி:

kpselvam@nlfcs.com.my

Archives

  • October 2021

Meta

  • Log in

Tan Sri K.R.Soma Foundations 2026 . Powered by WordPress